சேரன்மகாதேவியில் நாளைமுதல் 3 நாள்கள் கோடைகால பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் கோடைகால திறன் பயிற்சி முகாம் வியாழன் முதல் சனிக்கிழமை வரை (ஏப்.25-27) நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் கோடைகால திறன் பயிற்சி முகாம் வியாழன் முதல் சனிக்கிழமை வரை (ஏப்.25-27) நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா், மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ், ட்ரோன், 3 டி ப்ரிண்டிங், கணினி ஆபரேட்டிங் மற்றும் அடிப்படை மின்னணுவியல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இதில் பங்கேற்கும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் மாணவா்களுக்கு பேருந்து வசதி, மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் 9629547547, 7418020870 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அக்கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com