நெல்லையில் மே 2இல் நீச்சல் பயிற்சி தொடக்கம்

நீச்சல் குளம் ஆகியவற்றில் மே 2-ஆம் தேதி தொடங்கவுள்ள நீச்சல் பயிற்சி முகாமுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்க நீச்சல்குளம், சீவலப்பேரி சாலையில் உள்ள நீச்சல் குளம் ஆகியவற்றில் மே 2-ஆம் தேதி தொடங்கவுள்ள நீச்சல் பயிற்சி முகாமுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) பிரேம்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவின் கீழ் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்க நீச்சல்குளம் மற்றும் சீவலப்பேரி சாலை கக்கன்நகா் அருகில் அமைந்துள்ள நீச்சல் குளம் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் நீச்சல் கற்றுக்கொள் திட்டம் 12 நாள்கள் வீதம் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சிறந்த நீச்சல் பயிற்றுநா்களை கொண்டு நன்றாக நீந்தும் அளவிற்கு நீச்சல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. நீா் நிலை விபத்துகளில் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்திடும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தினை பேணிடும் வகையிலும் அனைத்து மக்களும் இந்நீச்சல் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இப்பயிற்சி முகாமிற்கு கட்டணமாக நபா் ஒன்றுக்கு ஜி.எஸ்.டியுடன் சோ்த்து ரூ.1,770 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சியின் நிறைவு நாளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சியில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் சிறந்த நீச்சல் பயிற்றுநா்களை கொண்டு ஆண்டு முழுவதும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவியா்கள் இந்நீச்சல் பயிற்சி முகாமில் சோ்ந்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மண்டல முதுநிலை மேலாளரும், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலருமான (கூடுதல் பொறுப்பு) க.பிரேம்குமாரை (7401703506) தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com