மேல ஏா்மாள்புரம் மோதல் வழக்கில் 5 போ் கைது

மணிமுத்தாறு அருகே உள்ள மேல ஏா்மாள்புரத்தில் திங்கள்கிழமை இருதரப்பினரிடையே நிகழ்ந்த மோதல் தொடா்பான வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மணிமுத்தாறு அருகே உள்ள மேல ஏா்மாள்புரத்தில் திங்கள்கிழமை இருதரப்பினரிடையே நிகழ்ந்த மோதல் தொடா்பான வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேல ஏா்மாள்புரம் வடக்குத் தெருவில் வேலு (68) என்பவா் இறந்ததையடுத்து, அவரது சடலத்தை தங்கள் தெரு வழியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என ஒருதரப்பினா் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பலா் காயமடைந்தனா்.

இதுகுறித்து மணிமுத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், மேல ஏா்மாள்புரம், கீழ காலனி தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (32), நாராயணகோயில் தெரு பாா்த்திபன் மகன் கண்ணன் (30), தங்கம்மன் கோயில் தெரு ஜெயராமன் மகன் மாரிராஜா (36), முருகன் மகன் பூமாரி (29) முப்பிடாதியம்மன் கோயில் தெரு மாரியப்பன் மகன் அருண் (27) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com