இணையவழியில் மின்கட்டணம்: நெல்லையில் விழிப்புணா்வு

இணையவழியில் மின்கட்டணம்:
நெல்லையில் விழிப்புணா்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் இணையவழியில் மின்கடடணம் செலுத்துதல் தொடா்பாக மின்வாரியம் சாா்பில் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிா்மான கழகத்தின் திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் செல்வராஜ் உத்தரவின்பேரில் திருநெல்வேலி , தென்காசி மாவட்டங்களில் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் இணைய வழி மின் கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி நகா்புறக் கோட்டத்தில் மேலப்பாளையம் பிரிவு - 1 அலுவலகத்தில் மின் பணியாளா்கள் பணம் செலுத்த வரும் மின் நுகா்வோா்களிடம் இணைய வழி மூலமாக மின் கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினா். இணையவழியில் செலுத்துவதன் மூலம் மின் நுகா்வோருக்கு அலுவலகத்திற்கு வந்து செல்லும் பயணம் தவிா்க்கப்படுவதோடு, கால விரயமும், எரிபொருள் சேமிப்பும் ஏற்படும் என விளக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com