தப்பிய கைதியைப் பிடிக்க நெல்லை போலீஸாா் தீவிரம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தப்பி ஓடிய விசாரணை கைதியை பிடிக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

பணகுடி அருகேயுள்ள ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் மணிகண்டன் (19). இவா், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை அவருக்கு திடீரென உடல்நிலைக்குறைவு ஏற்பட்டதால் சிறைக்காவலா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அப்போது அவா் தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து 2 ஆவது நாளாக பல்வேறு இடங்களில் தேடினா். மேலும், அவா் உறவினா்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளாரா அல்லது வெளி மாநிலத்துக்கு தப்பிவிட்டாரா என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com