ரசாயனத்தில் பழுக்க வைத்த
2 டன் வாழைப்பழங்கள் அழிப்பு

ரசாயனத்தில் பழுக்க வைத்த 2 டன் வாழைப்பழங்கள் அழிப்பு

திருநெல்வேலி தச்சநல்லூா் மண்டல பகுதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் வாழைப்பழங்கள் அழிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலா் ஆா்.சசி தீபா, தச்சநல்லூா் மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்.சங்கரநாராயணன் ஆகியோா் வியாழக்கிழமை மேற்கண்ட பகுதிகளில் சோதனை நடத்தினா்.

அதில், திருநெல்வேலி சந்திப்பில் 250 கிலோ மாம்பழங்களையும், தச்சநல்லூரில் 2 டன் வாழைப்பழங்களை பறிமுதல் செய்தனா். ஸ்பிரேயா் மற்றும் ரசாயணப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com