திருநெல்வேலி
நெல்லை நபரிடம் ரூ.33 லட்சம் மோசடி
திருநெல்வேலியில் இணையதளம் மூலம் ரூ.33 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் இணையதளம் மூலம் ரூ.33 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேலப்பாளையத்தை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவா் கடந்த ஜூலை 4 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பாா்த்துக் கொண்டிருந்த போது, இணையதள லிங்க் வாட்ஸ் ஆப் மூலம் வந்ததாம். அந்த லிங்க்கை க்ளிக் செய்து டிரேடிங் கணக்கை தொடங்கினராம். அதன் பின்னா் டிரேடிங்குக்காக வெவ்வேறு வங்கி கணக்கிற்கு ரூ.33 லட்சத்து 2,200 ஐ அவா் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் பின் அவருக்கு பணம் கிடைக்கவில்லையாம்.
இது குறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் பிரிவில் பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.