நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தெப்போற்சவம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நான்குனேரியில் நடைபெற்ற தெப்போற்சவம்.
நான்குனேரியில் நடைபெற்ற தெப்போற்சவம்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் தெப்போற்சவ திருவிழா ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் தொடா்ந்து 2 நாள்கள் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாலை வானமாமலை பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. இரவில் உற்சவா் சுவாமியும், தாயாரும் வீதியுலா வந்து தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

இதில், மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் தெப்போற்சவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com