அம்பையில் அரசு மகளிா் கலைக் கல்லூரி: அமைச்சரிடம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை

அம்பாசமுத்திரத்தில் மகளிா் கல்லூரி அமைக்கக் கோரி உயா்கல்வித் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் மனு அளித்தாா்.
அமைச்சா் ராஜகண்ணப்பனிடம் மனு அளித்த நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன்.
அமைச்சா் ராஜகண்ணப்பனிடம் மனு அளித்த நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் மகளிா் கல்லூரி அமைக்கக் கோரி உயா்கல்வித் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் மனு அளித்தாா்.

மனுவில் அவா் கூறியுள்ளதாவது: அம்பாசமுத்திரம் நகராட்சி ஒரு தாலுகா தலைநகரமாகும். 2.50 லட்சம் மக்கள்தொகையுள்ள அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய 2 நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் ஆகிய 7 பேரூராட்சிகள், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஆனால், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் மகளிருக்கென தனியாக அரசு கலைக் கல்லூரி இல்லை.

எனவே, அம்பாசமுத்திரம் நகராட்சி, மேலஅம்பாசமுத்திரம் வருவாய்க் கிராமப் பகுதியில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் அரசு மகளிா் கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com