நான்குனேரி அருகே மின்சாரம் பாய்ந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே விஜயநாராயணம் கடற்படைத் தளத்தில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த ஒப்பந்தத் தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே விஜயநாராயணம் கடற்படைத் தளத்தில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த ஒப்பந்தத் தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தெற்கு விஜயநாராயணம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (55). இவருக்கு மனைவி சக்திக்கனி, 2 மகள்கள் உள்ளனா். இவா், விஜயநாராயணம் கடற்படைத் தளத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக (எலக்ட்ரீசியன்) வேலை பாா்த்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை கடற்படை வளாகத்தில் மின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com