சேரன்மகாதேவி கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் போட்டிகள்

‘ஸ்காட் ஸ்கில் விருது 2024’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் ‘ஸ்காட் ஸ்கில் விருது 2024’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்விக் குழுமத் தலைவா் எஸ். கிளீட்டஸ் பாபு தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் சி. அருண்பாபு, தாளாளா் பிரியதா்ஷினி, பொது மேலாளா்கள் ஜெயக்குமாா், கிருஷ்ணகுமாா், இரா. தம்பித்துரை, கல்லூரி திறன் மேம்பாட்டுப் பயிற்சித் துறை இயக்குநா் சி.கே. ரவிசங்கா், மாணவா் சோ்க்கைப் பிரிவு இயக்குநா் ஜான்கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

200 போ் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றில் முதல் 3 இடங்களுக்கு 100 போ் போட்டியிட்டனா். அவா்களில் பிருந்தா, மஞ்சுளா, தங்கலெட்சுமி ஆகியோா் வெற்றி பெற்றனா். அவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சித் துறை இயக்குநா் முதல்வா் பியூலா, ஒருங்கிணைப்பாளா் கிரேஸ் சோபியா ஆகியோா் விருதுகள் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com