~ ~

101ஆவது பிறந்த நாள்: நெல்லையில் கருணாநிதி படத்துக்கு திமுகவினா் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி. திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி. திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மகாராஜநகரில் உள்ள திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமை வகித்து கருணாநிதி உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கே.கணேஷ்குமாா் ஆதித்தன், வழக்குரைஞா் அணி செல்வசூடாமணி, வேலன்குளம் கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

குறிச்சியில் உள்ள திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்து கருணாநிதி படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மேயா் பி.எம்.சரவணன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ், நிா்வாகிகள் விஜிலா சத்தியானந்த், மாலை ராஜா, பேச்சிப்பாண்டியன், கிரிஜாகுமாா், பா.அருண்குமாா், வெங்கடேஷ், பேட்டை மீரான்மைதீன், மகளிா் தொண்டரணி அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாளையங்கோட்டை ஜவஹா் மைதானம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமை வகித்து கருணாநிதி படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் வழக்குரைஞா் தினேஷ், மாமன்ற உறுப்பினா்கள் கந்தன், சுதா மூா்த்தி, கோகுலவாணி சுரேஷ், பேச்சியம்மாள், சின்னத்தாய் கிருஷ்ணன், சங்கா், முன்னாள் மாமன்ற உறுப்பினா் கமாலுதீன், பொறியாளா் அணி சாய்பாபா, இளைஞா் அணி சாமுவேல், பாளை. சதீஷ், செல்லத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு ஏற்பாட்டில் மகாராஜநகா் உழவா்சந்தை அருகேயுள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் தங்கியிருப்போருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மாவட்டப் பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மகளிா் தொண்டரணி அனிதா, பரமசிவஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com