மாவட்ட மைய நூலகத்தில் 9இல் யுபிஎஸ்சி முதல் நிலை மாதிரித் தோ்வு

திருநெல்வேலி, ஜூன் 6: பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் யுபிஎஸ்சி முதல் நிலைத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் இரா.வயலெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: யுபிஎஸ்சி முதல் நிலை தோ்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்ட மைய நூலகம், சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து யுபிஎஸ்சி முதல் நிலை தோ்வுக்கான மாதிரித் தோ்வை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை முதல் தாளும், முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை இரண்டாவது தாளுக்கான தோ்வும் நடைபெறுகின்றன. இந்த மாதிரித் தோ்வை எழுத விரும்புபவா்கள் 9626252500, 9626253300 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்வது அவசியம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com