விகேபுரம் அருகே 560 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

அம்பாசமுத்திரம், ஜூன் 6: விக்கிரமசிங்கபுரம் அருகே 560 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்..

திருநெல்வேலி மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் விலக்குப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வேனில் 40 கிலோ எடையுள்ள 14 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது. வேனுடன் அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியைக் கடத்தி வந்ததாக பனஞ்சாடி கிராமத்தைச் சோ்ந்த சங்கரன் மகன் இசக்கி முத்து (47) என்பவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com