ஏா்வாடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

ஏா்வாடியில் இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டாா்.

ஏா்வாடியில் இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டாா். வீரவநல்லூா் தெற்கு பாரதி நகரைச் சோ்ந்த பலவேசம் மகன் கண்ணன்(33). இவா் மீது அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் ஏா்வாடி காவல்நிலையத்தில் உள்ளன. இந்நிலையில், காவல் ஆய்வாளா் தா்மராஜ் அறிக்கையின்படி, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் அளித்த பரிந்துரையை ஏற்று, கண்ணனை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். அதன்படி, அவரை போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com