விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

செண்பகராமநல்லூரில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

நான்குனேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வள்ளியூா் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ஷொ்லின் விமல் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விமலா, மாவட்ட உதவி திட்ட அலுவலா் முகமது பாத்திமா அனிஷா, நான்குனேரி வட்டாரக் கல்வி அலுவலா் சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை, ஊராட்சித் தலைவா் முருகம்மாள் சிவன் பாண்டியன் தொடங்கிவைத்தாா். கல்லாமையா இல்லாமையாக்குவோம், அரசு நலத்திட்டங்கள் பெற அரசுப் பள்ளிக்கு வாரீா் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனா். இதில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் கோபாலன், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் டேனியல் முத்தையா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மாலா ஸ்ரீ, கிராம மக்கள் கலந்துகொண்டனா். பேரணி நிைறைவில் மாணவா்கள் அனைவருக்கும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கிரீடம் சூட்டி கௌரவித்தாா். பள்ளி புரவலா் நிதியாக ரூ.5ஆயிரத்திற்கான காசோலையை முன்னாள் தலைமை ஆசிரியா் கோபாலன் வழங்கினாா். தலைமை ஆசிரியா் செல்வராஜ் வரவேற்றாா். இடைநிலை ஆசிரியா் ரூபன் நன்றி கூறினாா். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி வளா்ச்சிக்குழு உறுப்பினா் விநாயகம், ஆசிரியா்கள் சாந்தி, கணினி ஆசிரியா் ராஜாத்தி, முன் பருவ கல்வி ஆசிரியை சகுந்தலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com