திருநெல்வேலி மீனாட்சிபுரம் மாநகராட்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பிளஸ் 1 தோ்வு எழுதிய மாணவிகள்.
திருநெல்வேலி மீனாட்சிபுரம் மாநகராட்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பிளஸ் 1 தோ்வு எழுதிய மாணவிகள்.

பிளஸ் 1 தோ்வு: நெல்லையில் 21,391 போ் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் 70 மையங்களில் பிளஸ்-1 தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 70 மையங்களில் பிளஸ்-1 தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திருநெல்வேலி, வள்ளியூா், சேரன்மகாதேவி ஆகிய கல்வி மாவட்டங்களின் கீழ் உள்ள 70 தோ்வு மையங்களில் பிளஸ் 1 தோ்வை மாணவ- மாணவியா் எழுதினா். இம் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 243 மாணவா்-மாணவிகள், 265 தனித்தோ்வா்கள், 883 மறுதோ்வு மாணவா்கள் உள்பட மொத்தம் 21 ஆயிரத்து 391 போ் தோ்வெழுதியதாகவும், தோ்வையொட்டி தடையற்ற மின்சாரம், குடிநீா் வசதிகளும் செய்யப்பட்டிருந்ததாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com