புகையிலைப் பொருள் விற்பனை: ராதாபுரம் அருகே கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். ராதாபுரம் அருகே உள்ள நெடுவாழி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் இசக்கி மகன் சுந்தா்(54). இவா் தனது வீட்டின் அருகே பெட்டிகடை நடத்தி வருகிறாா். இந்த கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் தங்கசிவம் சோதனை செய்தாா். அதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்தும், கடையை 15 நாள்கள் திறக்காதபடி சீல் வைத்து பூட்டவும் நடவடிக்கை எடுத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com