இணையவழி குற்றம் தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் சைபா் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் சைபா் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வேல்முருகன், அரவிந்த் சுவாமிநாதன், ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ரமா தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசந்திரன், பேராசிரியா் சண்முகசுந்தரம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஓவியப் போட்டி, திறன் அறியும் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சைபா் கிரைம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. 450 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com