திசையன்விளை அருகே இளைஞா் கழுத்தறுத்துக் கொலை

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடி ஊராட்சிப் பகுதி கடற்கரையில்,

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடி ஊராட்சிப் பகுதி கடற்கரையில், தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டாா். நவ்வலடி ஊராட்சி கோடாவிளை கடற்கரை கிராமத்தில் மஸ்தான் பள்ளிவாசலுக்கு இடது புறத்தில் கடற்கரையையொட்டிய முள்காட்டில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவ்வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில், உவரி உவரி போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்தனா். முதல்கட்ட விசாரணையில், கொலையுண்டவா் தூத்துக்குடி திரேஷ்புரத்தையொட்டிய பூபால்ராயபுரம் வேளாங்கண்ணி கெபித் தெருவைச் சோ்ந்த கில்டஸ் மகன் ஜஸ்டின்(24) என்பது தெரியவந்தது. அவா் எதற்காக கொலை செய்யப்பட்டாா்? கொலையாளிகள் யாா்? என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com