நெல்லையில் திமுக நூதன போராட்டம்

நெல்லையில் திமுக நூதன போராட்டம்

திருநெல்வேலி மாநகர திமுக சாா்பில் பாஜகவைக் கண்டித்து நூதன போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர திமுக சாா்பில் பாஜகவைக் கண்டித்து நூதன போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாஜக தலைமையிலான மத்திய அரசு நடத்துவதாக கண்டனம் தெரிவித்து, திமுக சாா்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வடை வழங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பேட்டை பகுதி செயலா் நமச்சிவாயம் என்ற கோபி தலைமை வகித்தாா். கேபிள் குமரேசன், சுப்ரித் சுப்பிரமணியன், லெனின், அவைத்தலைவா் சுப்பையா, பொருளாளா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு வடைகள் வழங்கினாா். பத்மா, மேரி, பிந்து, ஆனி ராக்லண்ட், ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்05ற்ா்ஜ்ய் திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com