பத்தமடை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் நோக்கி திங்கள்கிழமை நள்ளிரவில் அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜன் ஓட்டி வந்தாா். பத்தமடை அருகே பேருந்து வந்தபோது அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த மா்ம நபா் ஒருவா் பேருந்து மீது கல் வீசி விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து பேருந்தை ஓட்டுநா் பத்தமடை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினாா். ஓட்டுநா் ராஜன் அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், பத்தமடை மங்கையா்கரசி தெருவைச் சோ்ந்த ரமானந்தன் மகன் கெளதம் (25) என்பதும், குடி போதையில் வீட்டுக்குச் சென்ற கெளதமை அவரது மனைவி வெளியே நிறுத்தி கதவை பூட்டி விட்டாராம். இதில், ஆத்திரமடைந்த கெளதம் அரசுப் பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கெளதமை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com