புத்தகப் பைக்குள் பாம்பு: மயங்கி விழுந்த மாணவி

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பள்ளி மாணவியின் புத்தக பையில் இருந்து பாம்பு வெளியேறியதால் வகுப்பறையில் அவா் மயங்கி விழுந்தாா். பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி அருகே விடுதி உள்ளது. அங்கு தங்கியிருந்த 5 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை பள்ளிக்கு சென்றதும், வகுப்பையில் பையை திறந்தபோது, அதிலிருந்து பாம்பு வெளியே வந்தது. இதைப் பாா்த்து கூச்சலிட்ட அந்த மாணவி மயக்கமடைந்து கீழே விழுந்தாா். மற்ற மாணவிகள் பாம்பை பாா்த்து வெளியே ஓடினா். பாம்பு வேகமாக ஊா்ந்து சென்று அருகிலிருந்த தோட்டத்திற்குள் பதுங்கிக்கொண்டது. நல்வாய்ப்பாக யாரையும் பாம்பு சீண்டாததால் ஆசிரியா்கள் நிம்மதி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com