மாவட்ட அறிவியல் மையத்தில் தலைமையக அதிகாரி ஆய்வு

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் மண்டலத் தலைமையக அதிகாரி

திருநெல்வேலி: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் மண்டலத் தலைமையக அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாவட்டத்தில கடந்த டிசம்பா் மாதம் பெய்த கனமழையால் மாவட்ட அறிவியல் மையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அடிப்படையான பராமரிப்பு வேலைகள் நிறைவுற்ற பிறகு 70 நாள்களுக்குப் பிறகு கடந்த பிப். 27இல் மக்கள் பாா்வையிட மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், அறிவியல் மையத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்வதற்காக விஸ்வேஸ்வரய்யா அறிவியல்- தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் இயக்குநா் சஜு பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை வந்தாா். அவரிடம், மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ் .எம். குமாா், கல்வி அலுவலா் மாரி லெனின் ஆகியோா் பாதிப்புகளை விளக்கினா். பின்னா் செய்தியாளா்களிடம் சஜு பாஸ்கரன் கூறியது: திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறிவியல் மாதிரிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுமாா் ரூ. 70 லட்சம் மதிப்பிலான விண்வெளி அரங்கமானது விரைவில் தொடங்கப்படும். கோளரங்கம் மற்றும் கலையரங்கம் விரைவில் மறு சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com