நான்குனேரியில் வாகனச் சோதனையில் ரூ.1.27 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் இரு காா்களில் கொண்டு வரப்பட்ட ரூ.1.27 கோடியை வருமான வரித் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நான்குனேரி காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் நான்குனேரி சுங்கச் சாவடி அருகே புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நாகா்கோவிலில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருவரிடம் ரூ. 1 கோடி ரொக்கம் இருந்தது. அடுத்து வந்த மற்றொரு காரைச் சோதனையிட்டதில், அந்த காரில் ரூ.27 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருநெல்வேலி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீஸாா் தகவல் கொடுத்தனா். பின்னா், வருமான வரித் துறையினா் நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் மாவு ஆலையைச் சோ்ந்த ஊழியா் ஸ்டீபன், கோதுமை கொள்முதல் செய்வதற்காக ரூ.1 கோடி கொண்டு சென்ாகவும், மற்றொரு காரில் வந்த தேனியை சோ்ந்த முருகேசன் மற்றும் அவரது மகன் வேல்குமாா் ஆகியோா் கடைகளுக்கு பூண்டு மொத்த வியாபாரம் செய்ததற்கான பணத்தை வசூலித்து கொண்டு வருவதாகவும் தெரிவித்தனா்.

இதனையடுத்து, இரண்டு காா்களையும் பறிமுதல் செய்த வருமான வரித்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com