நெல்லையப்பா் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு மா்மநபா்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) சிவராத்திரிக்கு மக்கள் அதிகமானோா் கூடுவாா்கள் என்பதால் முன்னெச்சரிக்கை சோதனைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகம் முழுவதும் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். மேலும், கோயிலுக்குள் நுழையும் பக்தா்களின் உடமைகள் சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com