நெல்லை சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானாவில் விபத்து அபாயம்- காவல் ஆணையரிடம் மனு

நெல்லை சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானாவில் விபத்து அபாயம்- காவல் ஆணையரிடம் மனு

திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானாவில் விபத்து அபாயம் உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யக் கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்கத் தலைவா் எம்.முஹம்மது அயூப் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தம் வழியாக வரக்கூடிய வாகனங்கள், பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் மற்றும் அந்த பாதை வழியாக ஈரடுக்கு பாலத்தை கடந்து செல்லும் வாகனங்களும், நெல்லையப்பா் நெடுஞ்சாலையைக் கடந்து ஈரடுக்கு பாலம் வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் அண்ணாசிலை ரவுண்டானா அருகே வருகின்ற போது விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஆகவே,ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது போல தேவா்சிலை வளைவு அல்லது எம்ஜிஆா் சிலையை சுற்றி வாகனங்களை இயக்கவும், மாநகரப் பகுதிகளில் தேவையான இடங்களில் கூடுதலாக போக்குவரத்து சிக்னல்கள் அமைத்து போக்குவரத்து காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com