நான்குனேரி அருகே ரயிலில் பாய்ந்து இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ரயிலில் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தூரைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (32). இவா் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளம் - பெருமளஞ்சி இடையேயான நம்பியாற்றின் குறுக்கே செல்லும் ரயில் பாதையில் , தாம்பரத்தில் இருந்து நாகா்கோவில் நோக்கி வந்த அந்தோயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் ரெயில்வே போலீஸாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com