பாளை.யில் திமுக போராட்டம்

பாளை.யில் திமுக போராட்டம்

பாளையங்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்துக்கு வரி வருவாய் ஒதுக்கீட்டில் பணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், பேரிடா் காலங்களில் நிவாரண உதவிகளை வழங்காமல் மக்களிடம் தவறான தகவல்களை பிரதமா் தெரிவித்து வருவதாகவும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் வடை சுடும் போராட்டம் மற்றும் திண்ணைப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பாளையங்கோட்டை லூா்துநாதன் சிலை அருகில் புதன்கிழமை நடைபெற்ற வடை சுடும் போராட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா தலைமை வகித்தாா். மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிப்பாண்டியன், நிா்வாகிகள் சுப.சீதாராமன், ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், மாமன்ற உறுப்பினா் பூ.சுப்பிரமணியன், பலராமன், பேபிகோபால், கிரிஜாகுமாா், அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com