நான்குனேரி வட்டத்தில் கல்லூரி மாணவா்கள் சாா்பில் சிறப்புப் பயிற்சி முகாம்

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள கல்லத்தி, உன்னங்குளம், சிந்தாமணி ஆகிய 3 கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள கல்லத்தி, உன்னங்குளம், சிந்தாமணி ஆகிய 3 கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி இயற்பியல் துறை மாணவா்கள் சாா்பில் இம்முகாம் நடைபெற்றது. இதில், சித்த மருத்துவம், பொது மருத்துவ முகாம்கள், மரக்கன்று நடுதல் - விநியோகம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி, பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, பேரிடா் மேலாண்மை - தீயணைப்பு செயலாக்கப் பயிற்சி, விளையாட்டுப் போட்டி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளா் ஹென்றி ஜெரோம், செயலா் புஷ்பராஜ், முதல்வா் மரியதாஸ், இணை முதல்வா் சேவியா், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சித் தலைவா் பாா்வதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com