திமுக இளைஞரணியினா் நல உதவி

திமுக இளைஞரணியினா் நல உதவி

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நல உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நல உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன. பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள பாா்வையற்ற முதியோா் இல்லத்திற்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள், தலையணைகள், போா்வைகள், பிஸ்கட்டுகள் உள்பட சுமாா் ரூ.1 லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான நலஉதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சபிமுகம்மது வரவேற்றாா். மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளா் அருண்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்11ம்ங்க்ண் பாா்வையற்ற முதியோா் இல்லத்திற்கு நல உதவி வழங்கிய திமுகவினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com