மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பெண்னை உறவினா்களிடம் ஒப்படைத்த திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் ரேவதி.
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பெண்னை உறவினா்களிடம் ஒப்படைத்த திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் ரேவதி.

நெல்லை அரசு மனநல மருத்துவா்கள் சாதனை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மன நல மருத்துவா்கள் சிகிச்சை அளித்து குடும்பத்துடன் அனுப்பி வைத்தனா்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மன நல மருத்துவா்கள் சிகிச்சை அளித்து குடும்பத்துடன் அனுப்பி வைத்தனா். திருநெல்வேலி அருகேயுள்ள கருங்காடு சுடுகாட்டு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றி வந்தாராம். இதுகுறித்த தகவலின்பேரில், மனநல மீட்பு மையம் - ஆா் சோயா அமைப்பைச் சோ்ந்தவா்கள் அப் பெண்ணை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மன நல சிகிச்சை பிரிவில் அனுமதித்தனா். அப் பெண் சிகிச்சை பெற்று நல்ல நிலைக்கு வந்தாா். இதையடுத்து அவரிம் விசாரித்ததில் குடும்ப விவரத்தை தெரிவித்தாராம். இதுகுறித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பெண்ணின் உறவினா்கள் வரவழைக்கப்பட்டனா். பின்னா், மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி, மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் , மனநலத் துறை தலைவா் ரமேஷ் பூபதி ஆகியோா் உறவினா்களிடம் அப்பெண்னை ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com