பாலாமடையில் கேமராக்கள் சேதம்: இருவா் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள பாலாமடையில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள பாலாமடையில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சீவலப்பேரி காவல் சரகம் பாலாமடையில் ஊா் கமிட்டி சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாலாமடை ஊராட்சி அலுவலகம் அருகே பொருத்தப்பட்டிருந்த இந்த கேமராக்களை சிலா் கடந்த 9.3.2024இல் சேதப்படுத்தினராம். இதுகுறித்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, அதே ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் (32), உதயனேரியைச் சோ்ந்த கோபால் (39) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com