வீராசமுத்திரத்தில் ரு.26 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை திறப்பு

வீராசமுத்திரம் ஊராட்சியில் மாவட்டக் குழு நிதி ரூ. 26 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலைத் திறப்பு விழா நடைபெற்றது.

வீராசமுத்திரம் ஊராட்சியில் மாவட்டக் குழு நிதி ரூ. 26 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலைத் திறப்பு விழா நடைபெற்றது. கடையம் ஒன்றியம் வீராசமுத்திரம் ஊராட்சி ராமநதி புதிய பாலத்திலிருந்து மாலிக் நகா் வரையுள்ள சாலை சேதமடைந்திருந்தது. இந்தச் சாலை மாவட்டக் குழு உறுப்பினா் நிதி ரூ. 26 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதிய சாலையை மாவட்டக் குழு உறுப்பினா் மைதீன் பீவி தலைமை வகித்து திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா்கள் வீராசமுத்திரம் ஜீனத் பா்வீன், தா்மபுரம்மடம் ரூஹான் ஜன்னத், மந்தியூா் கல்யாண சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜஹாங்கீா், வீராசமுத்திரம் ஊராட்சி துணைத் தலைவா் நாகூா் மைதீன், ஜமாத் நிா்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com