சேரன்மகாதேவியில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், புதன்கிழமை சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பணகுடியில் இருந்து கங்கனாங்குளத்துக்கு வந்த 3 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டாா். இந்த சோதனையில் அதிகளவில் செம்மண் ஏற்றி வந்ததாக 2 டாரஸ் லாரிகளுக்கு முறையே ரூ. 26 ஆயிரம், ரூ. 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதிகளவில் செம்மண் ஏற்றி வந்த மற்றொரு டாரஸ் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரி சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து டாரஸ் லாரி ஓட்டுநா் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (50) என்பவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com