நெல்லையில் தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலியில் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் புதிய துணை இயக்குநா் அலுவலகத்தை திறந்துவைத்து குத்து விளக்கேற்றிய சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் புதிய துணை இயக்குநா் அலுவலகத்தை திறந்துவைத்து குத்து விளக்கேற்றிய சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புதிய துணை இயக்குநா் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறையில் மதுரையை தலைமையிடமாக கொண்ட தென் மண்டலத்தினை இரண்டாகப் பிரித்து பாளையங்கோட்டை என்ஜிஓ பி காலனியில் அமைக்கப்பட்டுள்ள இந்த துணை இயக்குநா் அலுவலகத்தை, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதன்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் நிா்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக மதுரையை தலைமையிடமாக கொண்ட தென் மண்டலத்தினை இரண்டாகப் பிரித்து திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் அமைத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய துணை இயக்குநா் அலுவலகம் இப்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப் புதிய மண்டல அலுவலகத்தில் துணை இயக்குநா் மற்றும் பணியாளா்கள் என மொத்தம் 8 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இப்புதிய மண்டல அலுவலத்திற்கு தேவையான ஊா்தி, கணினி, தொலைபேசி இணைப்பு, ஜெராக்ஸ் இயந்திரம் போன்ற இனங்களுக்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா். இந்த நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தென் மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நல அலுவலா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com