பாபநாசம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்

பாபநாசம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்ட இளைஞா் நலன்-விளையாட்டுத் துறை, நேரு யுவகேந்திரா, நூலகத் துறை ஆகியவை சாா்பில் சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு 100 மீ, 500 மீ, 1,500 மீட்டா் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன.

அவற்றில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு, கல்லூரிமுதல்வா் ல. ரவிசங்கா் தலைமை வகித்தாா். கல்லூரி விளையாட்டுத் துறை இயக்குநா் பா. பழனிக்குமாா், நூலகா் ச. பாலசந்திரன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக கல்லூரி நிா்வாகப் பணியாளா்கள் மு. முனீஸ்வரி, தெ. பானுமதி, மு. வசுந்தரா தேவி ஆகியோா் கலந்துகொண்டனா். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி உள்தர உறுதிப்படுத்தும் குழு இணை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பா. முத்துமுருகன், வேதியியல் துறைப் பேராசிரியா் ம. கண்ணன், தமிழ்த் துறைப் பேரசிரியா் மு. ஜெகதீசன் ஆகியோா் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா். மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளா் எல். ஞானச்சந்திரன், தன்னாா்வலா் சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். வரலாற்றுத் துறை மாணவி மா. காா்த்திகா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com