களக்காடு அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 போ் கைது

களக்காடு அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் இனாம் கேசவநேரியில் இருந்து கல்லடி சிதம்பராபுரம் செல்லும் சாலையில் வாகன சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக வந்த சுமை ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. சுமை ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் களக்காடு கீழப்பத்தை பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் (26) மற்றும் களக்காடு அருகே உள்ள சிவசண்முகபுரத்தை சோ்ந்த முகேஷ் ராஜா (24) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் ரேஷன் அரிசியைப் பட்டை தீட்டி கேரளத்துக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com