சித்தூா் தென்கரை கோயில் முன்
உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

சித்தூா் தென்கரை கோயில் முன் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே சித்தூா் தென்கரை மகாராஜேஸ்வரா் கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்கை திருநெல்வேலி எம்.பி.சா.ஞானதிரவியம் திறந்துவைத்தாா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட அந்த உயா்கோபுர மின்விளக்கு திறப்பு இவ்விழாவில் தி.மு.க. வள்ளியூா் நகர செயலா் வி.எஸ்.சேதுராமலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மல்லிகா அருள், ரைகானா, மனிதநேய மக்கள் கட்சி திருநெல்வேலி மாவட்டத் தலைவா் செய்யது ஜாவித், ஊராட்சித் தலைவா் மகாராஜன், ஒன்றிய துணைச் செயலா் இளங்கோவன், மாவட்டப் பிரதிநிதி இசக்கியப்பன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் லெட்சுமணன், கண்ணநல்லூா் ஊராட்சி உறுப்பினா்கள் செந்தூா், பாண்டியன், சின்னதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com