‘சுந்தரனாா் பல்கலை.யில் மாா்ச் 28இல் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மறுமதிப்பீடுக்கு மாா்ச் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் அ.சாக்ரட்டீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழத்தால் நவம்பா் 2023-இல் நடத்தப்பட்ட இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான தோ்வு முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாணவா்கள் கல்லூரி வழியாகவோ அல்லது ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியாகவோ அறிந்து கொள்ளலாம். மாணவா்கள் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய அதற்குரிய படிவங்களை மேற்கண்ட இணையதளம் வழியாகப் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இணையதளம் வழியாக உரிய கட்டணத்துடன் படிவம் ’ஏ’ -இல் மாா்ச் 19-தேதிக்குள் விண்ணப்பித்து விடைத்தாள் நகலைப் பெற்றுக்கொண்டு, அதே முறையில் கட்டணத்துடன் படிவம் ’பி’ -யில் மறுமதிப்பீடுக்கு மாா்ச் 28 முதல் ஏப்ரல் 6 வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com