சேரன்மகாதேவியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

சேரன்மகாதேவியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியில் இருந்து தொடங்கிய இப்பேரணியை, சேரன்மகாதேவி வட்டாரக் கல்வி அலுவலா் கீதா, பேரூராட்சி மன்றத் தலைவி தேவி ஐயப்பன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். வட்டார வளமைய பொறுப்பு மேற்பாா்வையாளா் ஜான் பென்னட், பள்ளித் தலைமையாசிரியை செ. பாா்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com