நான்குனேரி அரசு மகளிா் பள்ளியில் கூடுதல் கட்டடப் பணிக்கு அடிக்கல்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.40 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பள்ளியில் புதிதாக 6 வகுப்பறைக் கட்டடங்கள், 2 ஆய்வகங்கள் கட்டப்படவுள்ளது. இதையொட்டி நடைபெற்ற பூமி பூஜையில் நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் பங்கேற்று, பணிகளைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் கல்யாணி வானமாமலை, பள்ளித் தலைமையாசிரியா் மாா்க்ரெட் ஜான்சிராணி, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் ஜெயந்தி, காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com