பட்டா வழங்கக் கோரி கருப்புக் கொடி கட்டி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

பட்டா வழங்கக் கோரி கருப்புக் கொடி கட்டி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருநெல்வேலியை அடுத்த பேட்டை எம்ஜிஆா் நகா் பகுதியில் பட்டா வழங்கக் கோரி, வீடுகளில் கருப்புக் கொடி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பேட்டை எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீா்நிலை புறம்போக்கு பகுதியில் அருந்ததியினா் மற்றும் பிற சமுதாயத்தை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பேட்டை தங்கம்மன் கோயில் தெருவிலும் அருந்ததியின மக்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் குடும்பத்தினா் அனைவரும் முறையாக தீா்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனா்.

ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சில நாள்களுக்கு முன்பாக தங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளை ஒட்டினா். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனா். அதன்படி அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது. அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு ஆதித்தமிழா் பேரவை மாவட்ட தலைவா் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோயில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனா். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா், போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் உடன்பாடு ஏற்படாததால் அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com