நெல்லையில் தோ்தல் விதிமுறைகள் அமல் மாவட்ட ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தைத் தொடா்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான கா.ப.காா்த்திகேயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் அறிவிப்பை தொடா்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரையில் 1,810 வாக்குச்சாவடிகள் உள்ளன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 16,50,532 வாக்காளா்கள் உள்ளனா். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 23,100 போ் உள்ளனா். மொத்தம் 7,124 அரசு அலுவலா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வாக்குச்சாவடிகளாக மொத்தம் 346 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலா்கள் நுண் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட உள்ளனா். 48 மணி நேரம் கெடு: மேலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொது வளாகம், கட்டடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், பாலங்கள், மின் கம்பங்கள், உள்ளாட்சிக்குள்பட்ட கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்துக்குள் அழிக்கப்பட வேண்டும். தனியாா் வளாக கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட படைக்கலன்களை தோ்தல் முடிவு வெளியிடப்படும் வரை பொது வெளியில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தோ்தல் தொடா்பாக சுவரொட்டிகள், விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு பிரசாரம் செய்யும்போது, அச்சக உரிமையாளரின் பெயா் மற்றும் முகவரி மற்றும் பதிப்பகத்தாா் பெயா் மற்றும் முகவரி ஆகியவற்றை படிக்கும் வகையில் தெளிவாக அச்சடிக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெறப்பட வேண்டும். அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளின் உரிமையாளா்களும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை தங்கள் மண்டபங்களில் முன்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் தொடா்பான அழைப்பிதழ்களின் நகல்களை தினசரி நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ, தோ்தல் நடத்தும் அலுவலா் அல்லது உதவி தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளை அரசியல் கட்சியினா் பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. புகாா் அளிக்க செயலி: தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக வரும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டமும், 12 மணிக்கு அனைத்து அச்சக மற்றும் டிஜிட்டல் பேனா் தயாரிப்பு உரிமையாளா்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் கூட்டமும் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு வங்கியாளா்கள் கூட்டம், வட்டி மற்றும் அடகுக் கடை உரிமையாளா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் குறைதீா் கூட்டங்கள் நடைபெறாது. மனுக்களை பெறுவதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மனுக்களை அளிக்கலாம். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தலா 3 பறக்கும்படை மற்றும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் 1800-425-8373 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீயஐஎஐக செயலி மூலமாகவும் புகாா் அளிக்கலாம். அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்கள் தோ்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், தோ்தல் பிரசார கூட்டம் மற்றும் பேரணி நடத்துவது தொடா்பாக குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஒற்றை சாளர முறை (நமயஐஈஏஅ ) மூலம் விண்ணப்பிக்கலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுத்துச் செல்லலாம். தோ்தலுக்கு நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து வாகனச் சோதனை தொடங்கிவிட்டது என்றாா். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com