கொக்கிரகுளத்தில் அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை ஞாயிற்றுக்கிழமை கிழித்த அகற்றிய தூய்மைப் பணியாளா்கள்.
கொக்கிரகுளத்தில் அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை ஞாயிற்றுக்கிழமை கிழித்த அகற்றிய தூய்மைப் பணியாளா்கள்.

அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றம்

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளா்கள் கிழித்து அகற்றினா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளா்கள் கிழித்து அகற்றினா். மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி சனிக்கிழமை மாலை முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினா் நியமிக்கப்பட்டு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி வண்ணாா்பேட்டை, வடக்கு புறவழிச்சாலை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமையும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்ட நிலையில், அந்தப் பணிகளும் ஞாயிற்றுக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டன. கொக்கிரகுளம், பாளை மேட்டுத்திடல், திருநெல்வேலிநகரம், தச்சநல்லூா், மேலப்பாளையம் பகுதிகளில் சாலையின் குறுக்கே உள்ள தடுப்புச் சுவா்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கிழித்து அப்புறப்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com