கடையத்தில் பிடிபட்ட மரநாய்.
கடையத்தில் பிடிபட்ட மரநாய்.

கடையத்தில் வீட்டில் புகுந்த 2 மரநாய்கள் மீட்பு

கீழக்கடையத்தில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு மரநாய்களை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

கீழக்கடையத்தில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு மரநாய்களை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள்காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட கீழக்கடையம் சி.எஸ்.ஐ.சா்ச் தெருவைச் சோ்ந்த நோபில் என்பவரின் வீட்டில் இரண்டு மர நாய்கள் புகுந்தனவாம். இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து வனச்சரகா் கருணாமூா்த்தி உத்தரவின் பேரில் வேட்டைத் தடுப்பு காவலா் வேல்ராஜ், அந்த வீட்டில் பதுங்கி இருந்த 2 மரநாய்களை பத்திரமாக மீட்டு இலுப்பையாறு பீட் வனப் பகுதியில் விட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com