பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.
பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.

பேட்டை வாக்குச்சாவடிகளில் ஆய்வு

பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தோ்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தோ்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா, சாய்வுதளம் உள்ளிட்டவை கூடுதலாக அமைக்க வேண்டியுள்ளதா என்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மண்டல தோ்தல் அலுவலா்கள், காவல் துறையினா் இணைந்து வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்ய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.ப.காா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தோ்தல் அலுவலா்களும், காவல் துறையினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாயில்கள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com