திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக மனு பெட்டியில் திங்கள்கிழமை மனு அளித்த முதியவா்கள்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக மனு பெட்டியில் திங்கள்கிழமை மனு அளித்த முதியவா்கள்.

குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனு அளிப்பு

தோ்தல் நடத்தை விதிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மனு பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் தோ்தல் நடத்தை விதிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மனு பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெறும். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் வாரந்தோறும் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டம் தோ்தல் முடிவுகள் வெளியாகும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காக ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் மனு பெட்டி வைக்கப்படும் எனவும், அதில், மக்கள் தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com