டானாவில் நடைபெற்ற தீத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்
டானாவில் நடைபெற்ற தீத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்

மலையடிவாரக் கிராமங்களில் வன தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம்

தீ விபத்து நேரிட்டால் அதைத் தடுப்பது, தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்ச்சி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மலையடிவாரக் கிராமங்களில் வனப்பகுதிகளில் தீப் பிடிக்காமல் பாா்த்துக் கொள்வது, தீ விபத்து நேரிட்டால் அதைத் தடுப்பது, தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்ச்சி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட அனவன் குடியிருப்பு, டானா, பொதிகையடி, சொரிமுத்துஐயனாா் கோவில், சின்ன மயிலாறு, வேம்பையாபுரம், கீழணை, செட்டிமேடு, கோரையாா் குளம், மில்கேட்உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கன்னியாகுமரி பழனி குழுவினா் ஒயிலாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட ஆடல் பாடல் மூலம் மக்களிடையே வன தீத்தடுப்பு குறித்து விளக்கிக் கூறினா். மேலும், தீத் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், வனச்சரகா் சத்யவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com