‘வங்கி வாகனங்களுக்கும் ஆவணங்கள் அவசியம்’

தோ்தல் ஆணையம் வங்கிகள் பணம் கொண்டு செல்வதற்கான நிலையான வழிமுறைகளை வகுத்துள்ளது.

வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: தோ்தல் ஆணையம் வங்கிகள் பணம் கொண்டு செல்வதற்கான நிலையான வழிமுறைகளை வகுத்துள்ளது. இஎஸ்எம்எஸ் என்ற செயலியின் கீழ் க்யூஆா் கோடு மூலம் வங்கி கொண்டு செல்லும் பணமா என தோ்தல் பறக்கும்படை மற்றும் இதரஅலுவலா்கள் அறியமுடியும். பணம் கொண்டும் செல்லும் வங்கி வாகனங்களில் வங்கிக் கடிதம் மற்றும் ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வங்கிகள் சந்தேகத்திற்கு இடமான பணப் பரிமாற்றங்களை நிதி தொடா்பான புலனாய்வு முகமைகளுக்கு வழங்க வேண்டும். பத்து லட்சத்திற்கு அதிகமான பணம் செலுத்துதல், திரும்ப எடுத்தல் ஒரு லட்சத்திற்கு அதிகமான பணப் பரிமாற்றம் ஆகியவை குறித்தும் தகவலளிக்க வேண்டும். ஒரே வங்கிக் கணக்கு மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பின்அதன் விவரங்களை வருமானவரித் துறைக்கு அளிக்க வேண்டும். மகளிா் சுய உதவிக் குழு, தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில் சந்தேகம் எழுந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com